செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா வளிமண்டல சுழற்சி-தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

வளிமண்டல சுழற்சி-தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

0 minutes read

வளிமண்டலச் சுழற்சி காரணமாக வட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக் கூடும் என அனர்த்த மையம் குறிப்பிட்டுள்ளது.

வட தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அடுத்த இரு நாட்களும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

ஜூன் 9, 10 ஆகிய நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழையும் சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.