கனமழை காரணமாக சில ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு செய்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்தியா முழுவதும் உள்ள, குறிப்பாக மும்பையில் உள்ள ரயில்வே பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
பருவமழையின்போது மும்பைவாசிகளுக்கு எந்தவிதமான அசௌகரியமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய ரயில்வே உறுதி பூண்டுள்ளது.
பருவமழையை எதிர்கொள்வதில் ரயில்வேயின் தொழிநுட்ப மற்றும் சிவில் பணிகளின் செயல்திறனை ஆய்வு செய்வதற்காக ஐஐடி மும்பை போன்ற நிறுவனங்களுடன் ரயில்வே துறை கைகோர்க்க வேண்டும்.
ரயிலின் பாதுகாப்பு மற்றும் தடையில்லா இயக்கத்தை உறுதி செய்வதற்காக புதுமைகளும்,கடின உழைப்பும் இணைய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.