செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு மக்களுக்கு அறிவிப்பு!

இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு மக்களுக்கு அறிவிப்பு!

0 minutes read

மக்கள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துகொள்வதற்கு இரண்டு முகக்கவசங்களை அணியுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர், தனது ருவிட்டரில் பதிவேற்றியுள்ள காணொளியிலேயே இதனை வலியுறுத்தியுள்ளார்.

குறித்த காணொளியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் அனைவரும் தங்களுக்குத் தாங்களே சுயகட்டுப்பாட்டை விதித்துக்கொள்ள வேண்டும்.

வீட்டை விட்டு வெளியில் வரும் எல்லோரும் முகக்கவசம் அணிவது மிகவும் கட்டாயமாகும். கூட்டமாகக் கூடுவதை தவிர்த்துகொள்வதுடன் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுங்கள்.

மேலும் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும்போது அல்லது கூட்டம் அதிகமாக இருக்கின்ற இடங்களில் இரண்டு முகக்கவசங்களை பயன்படுத்துங்கள்.

கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யுங்கள். இதேவேளை நோய்த்தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

குறித்த கட்டுப்பாடுகள் எல்லாம் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் அல்ல. மக்கள் தங்களுக்குத் தாங்களே போட்டுக்கொள்ளக் கூடிய சுயகட்டுப்பாடுகளாக மாற வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More