இந்தியாவுக்கு நாளை விஜயம் செய்யவுள்ளார் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் லி ஷாங்ஃபு; ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ராணுவ அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவே வருகிறார்.
டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் ஜெனரல் லி பங்கேற்று உரையாற்ற உள்ளதாக; சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த பயணத்தின்போது பல தரப்பட்ட நபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெறப் உள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்-கையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பாக்கப்படுகிறது.
கடந்த 2020ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா ராணுவம் இடையே எல்லைப் பிரச்சனை நீடிக்கும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நெருக்கமானவராகக் கருதப்படும் ஜெனரல் லியின், இந்தியப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.