Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நரேந்திர மோடி அரசுக்கு எதிராக இரண்டாவது நாள் விவாதம்

நரேந்திர மோடி அரசுக்கு எதிராக இரண்டாவது நாள் விவாதம்

1 minutes read

நரேந்திர மோடி அரசுக்கு எதிராக இரண்டாவது நாள் விவாதம் இன்று(9.8.2023) . மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நரேந்திர மோடி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று விவாதம் நடந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற உள்ளது.

பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா விவாதம் கொண்டு வந்துள்ளன.

இந்த விவாதத்தின்போது, ஆளுங்கட்சி எம்.பி.க்களை எவ்வாறு எதிர்கொள்வது, விவாதங்களை எப்படி எடுத்து வைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்த, எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மக்களவையில் எம்.பி.க்கள் இருக்கும் என்றால், அதன் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் 10.30 மணியில் நடைபெற இருக்கிறது.

அதேபோல், காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் 10 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டம் காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More