Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாளில் பிரித்தானியாவில் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாளில் பிரித்தானியாவில் போராட்டம்

1 minutes read

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட க்கான பட முடிவு

இனப்படுகொலைப்போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், காணாமல்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற நிலையறியாது அவர்களதுஉறவினர்கள் தவிக்கின்றனர்.

தமிழீழத் தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்துகாணாமலாக்கப்பட்டவர்களுக்காக 38 அன்னையர்களை போராடும் காலத்தில் இழந்தும் 1000 நாட்களாக இரவு பகலாகப் போராடும் உறவுகள் மாபெரும் எழுச்சிப் பேரணி ஒன்றைத் தமிழர் தாயகப் பகுதியில் 8 மாவட்ட மக்களாகநடத்தவுள்ள நிலையில் இம் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்குஅனைத்துப் புலம் பெயர்ந்த தமிழர்களும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று பிரித்தானியத் தமிழர் பேரவை வேண்டுகின்றது.

இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் தினமான ஆகத்து 30ஆம் நாளன்று உலகநாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளநிலையில் இப்போராட்டம் உலக நாடுகள் மிகப்பாரதூரமான சிக்கலாகக் கவனத்திற்கொண்டுவந்து தீர்வை பெற்றுத்தரவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த காலங்களைப் போன்று பிரித்தானியத் தமிழர் பேரவை தொடர்ச்சியாகப் போராடும்.

பிரித்தானியாவில் வரும் ஆகத்து 30, 2019 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல்12:30 மணிக்குத் தமிழ் அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் எமது தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் இலண்டன் வடக்குத் தெராசு திராபல்கர் சதுக்கத்தில்(North terrace, Trafalgar Square , London WC2N 5DXஇல்) இடம்பெறவிருக்கின்றது!

பிரித்தானிய வாழ் அனைத்துத் தமிழ் உறவுகளும் இப் போராட்டத்தில் கலந்துகொண்டு தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க ஒற்றுமையாக அணி திரளுமாறு வேண்டுகின்றோம்!

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.

தொடர்புகளுக்கு: 0208 808 0465, 07508 365678, 07814 486087,07943 100035

பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More