இந்தியாவில் இருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க ஆசிய நாடுகளில் மைக் பாம்பியோ சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்றிரவு கொழும்புவில் மைக் பாம்பியோவை இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே விமான நிலையத்தில் வரவேற்றார்.
அவர் வருகையை கண்டித்து அமெரிக்கத் தூதரகர் வாயில் அருகே போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சீனா தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் இலங்கையை அமெரிக்கா மிரட்டுவதை கைவிட வேண்டும் என்று எச்சரித்துள்ளது.