போகம்பரை சிறைச்சாலையில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக கண்டி நகர் பாதிக்கப்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போகம்பர சிறைச்சாலையில் மேலும் 80 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், போகம்பர சிறைச்சாலையில் நிலைமை மோசமடைவதால், 100 நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கான நிலையத்தையே உருவாக்கிய நிலையில், சிறைச்சாலையில் 800க்கும் அதிகமான கைதிகள் உள்ளனர் என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை ஊழியர்கள் உணவு போன்றவற்றை பெறுவதற்காக கண்டி நகருக்கு செல்கின்றனர் என்றும் இதன் காரணமாக கொரோனா வைரஸினை கட்டுப்படுத்தாவிட்டால் கண்டிநகர் பாதிக்கப்படலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
