கொழும்பு- புறக்கோட்டை வழமைக்கு திரும்பினாலும் மொத்த விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அஜித் ரோஹண மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, வெரலபட மற்றும் புறக்கோட்டை பொலிஸ் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் ராகம மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவும் இன்று காலை 5 மணியுடன் வழமைக்கு திரும்பியுள்ளன.
ஆனாலும் மட்டக்குளி மற்றும் வெரலபட பொலிஸ் பிரிவுகளில் சில பிரதேசங்களும், தொடர்மாடி குடியிருப்புக்களும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில் புறக்கோட்டை பொலிஸ் பிரிவு வழமைக்கு கொண்டுவரப்பட்டாலும், 4 மற்றும் 5 ஆம் சந்தி பகுதிகள் திறக்கப்படமாட்டாது. இதேவேளை மெனிங் சந்தையும் திறக்கப்படமாட்டாது.
இந்த பகுதியில் மொத்த விற்பனை நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
