Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வரவு செலவு திட்டத்தின் 7ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று!

வரவு செலவு திட்டத்தின் 7ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று!

1 minutes read

2021 வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தின் ஏழாவது நாள் விவாதம் இன்று (திங்கட்கிழமை)  இடம்பெறவுள்ளது.

அதன்படி நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

இதன்போது, சுகாதார அமைச்சு மற்றும் சுதேச வைத்திய ஊக்குவிப்பு கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி சமூக, சுகாதார இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது.

அதேநேரம், மருந்து உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குறுத்தல் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதமும் நடைபெறவுள்ளது.

நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 17ஆம் திகதி 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் 4 நாட்களுக்கு வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டம் 99 மேலதிக வாக்குகளால்  நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

அதேநேரம், வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இறுதி நாளான 10ஆம் திகதியன்று,  அதன் மீதான வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More