செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைப்பு

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைப்பு

0 minutes read

யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். எதிர்பாராத இந்த நிலையினால் அப்பிரதேசத்தில் வாழும் குடும்பங்கள் சிக்கலை எதர்நோக்கியிருந்தனர். வறியகுடும்பத்தை சார்ந்தவர்களால் அவர்களுக்குத் தேவையான விடயங்களை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் SOLVE நிறுவனத்திற்கு தகவல் கிடைக்கப்பெற்றது.

யாழ் மகளிர் முன்னனியின் ஊடாக திருமதி தயானி அருண்சித்தார்தனால் இத் தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக செயலில் இறங்கிய SOLVE நிறுவனர் திருமதி பவதாரணி ராஜசிங்கம் தேவையான உலர்உணவு ,நுளம்புவலை மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க முன்வந்தார். அதனடிப்படையில்நேற்றைய தினம் SOLVE குழுவினரால் அவர்களுக்குத் தேவையான பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.