செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பு – மரப்பாலம் குளத்தில் நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு – மரப்பாலம் குளத்தில் நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

0 minutes read

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மரப்பாலம் குளத்தில் நீராடச்சென்ற இளைஞர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சுவிஸ் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய அன்ரன்ராஜ் விதுசன் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் இருந்து மரப்பாலத்திலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்ற இளைஞர், நேற்று மாலை மரப்பாலம் குளத்தில் குளிக்கச்சென்ற வேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைகளுக்காக உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.