செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்.மாநகர சபை முதல்வராக மணிவண்ணன் தெரிவு!

யாழ்.மாநகர சபை முதல்வராக மணிவண்ணன் தெரிவு!

1 minutes read

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வராக சட்டத்தரணி விஸ்லிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்டைவிட ஒரு மேலதிக வாக்குகளைப் பெற்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ். மாநகர சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் பதவியேற்றுள்ளார்.

யாழ்.மாநகர சபையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாக்களிப்பில் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் 45 உறுப்பினர்களில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் மகாலிங்கம் அருள்குமரன் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் 3 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

ஏனைய 41 உறுப்பினர்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 10 உறுப்பினர்களும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள் உட்பட 21 உறுப்பினர்கள் வி.மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்கினார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் தமிழர் விடுதலை கூட்டணியின் ஒரு உறுப்பினரும் உள்ளடங்கலாக 20 உறுப்பினர்கள் இம்மானுவேல் ஆர்னோல்ட்க்கு ஆதரவு வழங்கினார்கள்.

அதனை அடுத்து ஒரு வாக்கு வித்தியாசத்தில் சடடத்தரணி வி.மணிவண்ணன் யாழ்.மாநகர சபையின் முதல்வராக தெரிவானார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.