Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அம்பாறை மாவட்ட கரையோர கிராமங்களில் உணரப்பட்ட நில அதிர்வு

அம்பாறை மாவட்ட கரையோர கிராமங்களில் உணரப்பட்ட நில அதிர்வு

1 minutes read

அம்பாறை மாவட்டத்தின் கரையோர கிராமங்களில் சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ நிலையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன் 4.0 ரிச்டெர் அளவில் குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டது.

அம்பாறை மாவட்டத்தின், பொத்துவில் சர்வோதயபுரம், சின்னஊறணி,  ஜலால்தீன்சதுக்கம், களப்புகட்டு ஆகிய கடற்கரை கிராமங்களிலேயே குறித்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இன்று 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11.44 மணிக்கு குறித்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் சுமார் 2 முதல் 3 நிமிடங்கள் நில அதிர்வு உணரப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நில அதிர்வால் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கும் பொதுமக்கள் சிறு பதற்றத்துடன் தாம் இருப்பதாக குறிப்பிட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More