Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். மாவட்ட பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைப்பு ஏன்?

யாழ். மாவட்ட பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைப்பு ஏன்?

1 minutes read

நாட்டிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் வருடாந்தம் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு அமைய யாழ் மாவட்டத்தில் ஆசனங்களின்  எண்ணிக்கை குறைவடைந்துள்ளன. 

 அதேவேளை கம்பஹா மாவட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய யாழ் மாவட்டத்தில் 7 ஆக காணப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 6 ஆகவும் , கம்பஹா மாவட்டத்தில் 18 ஆக காணப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 19 ஆகவும் அதிகரித்துள்ளன.

2020 ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் கணிப்பீட்டின் அடிப்படையில் இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் புதிதாக 172,000 வாக்காளர்கள் பதிவாகியுள்ளமைக்கமைய , இலங்கையில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 16, 400, 000 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More