Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை துமிந்தவிற்கு பொதுமன்னிப்பு – அமெரிக்கா கண்டனம்!

துமிந்தவிற்கு பொதுமன்னிப்பு – அமெரிக்கா கண்டனம்!

1 minutes read

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளமைக்கு அமெரிக்கா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி.டெப்பிலிட்ஸ் தனது டுவிட்டரில் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் உறுதிசெய்த துமிந்த சில்வாவின் தீர்ப்பை தற்போது மன்னிப்பதென்பது சட்டத்தின் ஆட்சியைக் குறைத்து மதிப்பீடுக்கு உட்படுத்துவதாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

“இலங்கை அரசாங்கம் செய்துள்ள ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமமான அணுகல் அடிப்படைக்கு இது விரோதமானது.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டமைக்கு அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More