Friday, September 17, 2021

இதையும் படிங்க

மற்றுமொரு தலிபான் ராஜ்ஜியம் உருவாக அனுமதி இல்லை!

மற்றுமொரு பாகிஸ்தான் மற்றும் தலிபான் ராஜ்ஜியம் உருவாக மேற்கு வங்கம் எப்போதும் அனுமதிக்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க...

யாழில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர்.

உள்ளூராட்சி தேர்தல் : வேட்பு மனுத்தாக்கல் குறித்த அறிவிப்பு!

விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவோர் நாளைய தினம் (சனிக்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர்,...

வடக்கில் இம்மாதம் இதுவரை 230 பேர் கோவிட் தொற்றால் பலி!

செப்டெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்து 865 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38.2 கோடியை தாண்டியது!

வாஷிங்டன்,உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன்...

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது தொடர்ச்சியாக...

ஆசிரியர்

தமிழர்களின் துயர நிலையறிந்து ஐ.நா. கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும்!

தமிழர்களின் துயர நிலையறிந்து ஐ.நா. இன்னமும் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக முன்வைத்துள்ள அறிக்கை குறித்து இன்று (புதன்கிழமை) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “இலங்கை அரசாங்கத்தின் மேல் முழுவதும் நம்பிக்கையிழந்து, கொல்லப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக உங்களை மட்டுமே நம்பி காத்திருக்கும் மக்களுக்கு மனித உரிமைகள் ஆணையகத்தின் செப்டெம்பர் 2021 அறிக்கை என்பது, மனச்சஞ்சலத்தையும் அமைதியின்மையையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

ஒருசில வாரங்களுக்கு முன்புதான் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக எந்த தேடுதலையோ வேறெந்த நடவடிக்கைகளையோ நடாத்த வேண்டாம் என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கும் சூழ்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் மேல் நம்பிக்கைகொண்டு, அவர்கள் அனைத்தையும் செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருப்பது தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில்,அதனைக் கையாள்வதில், யுத்தத்திலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றுவதில் ஐ.நா. தவறிழைத்துவிட்டதோ என்பதைக் கண்டறிவதற்காக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டதை அனைவரும் அறிவர். ஏற்கனவே இந்த விடயத்தில் ஐ.நா. தன்னை சுயவிமர்சனம் செய்துள்ளது.

அதேபோல் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் தவறிழைக்காமல் செயற்பட வேண்டுமென்பதே தமிழ் மக்களின் ஆதங்கமாக இருக்கின்றது.

கடந்த மார்ச் மாத அறிக்கையிடுதலின்போது இலங்கை அரசாங்கத்திற்கு மேல் பொருளாதார, பிராயண தடைகள் கொண்டுவரப்படுமாக இருந்தால் அது ஒட்டுமொத்தமான இலங்கை மக்களையும் பாதிக்கும் என்ற அடிப்படையில், அவ்வாறான தடைகளுக்குப் பதிலாக சர்வதேச சட்டங்களைப் பின்பற்றுகின்ற அரசுகள் தத்தமது நாடுகளில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் பரிந்துரை செய்திருந்தது.

ஆனால் இந்த இடைப்பட்ட ஆறு மாதங்களில் தமிழ் மக்களின்மீது மோசமான அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதே தவிர, அச்சத்தின் மத்தியில் வாழ்கின்ற தமிழ் மக்களை அரவணைத்து அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான எத்தகைய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

காலம் கடந்துபோவதற்கு முன்பாக இலங்கை அரசாங்கம் தனது நாட்டின் ஒருபகுதி குடிமக்களுக்கு எதிராகச் செயற்பட்டது என்பதையும் இதனால் அவர்களில் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்பதையும் ஐ.நா. சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலமாகவே இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நடக்காதவாறு தடுப்பதற்கும் தமிழ் மக்களுக்கு உரித்தான நீதி கிடைப்பதற்கும் வழிவகுக்கும் என்று நம்புகிறோம்.

ஐ.நாவின் மீதும் அதன் உறுப்பு அமைப்புகள் மீதும் தமிழ் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஐ.நா.வும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகமும் காப்பாற்றும் என்று எதிர்பார்க்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

லொஹான் ரத்வத்தயின் செயற்பாடு அரசாங்கத்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயின் செயற்பாடு, இலங்கை அரசாங்தக்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எதிர்வரும் காலங்கள் அவதானம் மிக்கவை : மத்திய அரசு அறிவுறுத்தல்!

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று வீழ்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், எதிர்வரும் காலங்களில் பண்டிகை காலம் ஆரம்பமாகும் என்பதால் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி!

இலங்கையில் 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர...

லொஹான் ரத்வத்தவின் விவகாரத்தில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் விவகாரம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனத் தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இதுதொடர்பான விசாரணைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அமெரிக்க மருத்துவ பீட பழைய மாணவர்களால் தகவல் தொழிநுட்ப கூடம் கையளிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன், மருத்துவ பீட பழைய மாணவர்களால் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கையளிக்கப்பட்ட தகவல் தொழிநுட்ப கூடத்தின் திறப்பு...

மதுபானசாலைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்?

நாட்டில் இன்று முதல் மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான போலி செய்தியை அடுத்து நாட்டின் பல பாகங்களிலும்  உள்ள மதுபானக் கடைகளின் முன் பொது மக்கள் மதுபானம்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மற்றுமொரு தலிபான் ராஜ்ஜியம் உருவாக அனுமதி இல்லை!

மற்றுமொரு பாகிஸ்தான் மற்றும் தலிபான் ராஜ்ஜியம் உருவாக மேற்கு வங்கம் எப்போதும் அனுமதிக்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க...

யாழில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர்.

பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா காலமானார்!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா. பள்ளிப்படிப்பை மட்டுமே நிறைவுசெய்த இவர் கவிதைகளை எழுதி, வாசகர்களை தன் வசம் ஈர்த்தவர்.

மேலும் பதிவுகள்

ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) மாலை திறக்கப்படவுள்ளது. தந்திரி கண்டரரு மகேஷ் மேகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி...

நிரந்தர விலக்குப் பெறும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா!

சென்னை: நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெற சட்டப்பேரவையில் இன்று மசோதா நிறைவேற்றப்படும் என்றும், மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...

ஆப்கான் மக்களுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும்!

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஐ.நா சபையில் கருத்து வெளியிட்ட அவர்,...

நடிகர் விவேக் மரணம் -விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தது தொடர்பாக விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியிருந்தார்.

செல்வத்தை அள்ளித்தரும் மகாலட்சுமி விரத பூஜை!

செல்வத்திற்கு அதிபதி லட்சுமிதேவி. அந்த லட்சுமிதேவியின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டால்தான் நமக்கு செல்வம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து லட்சுமிதேவியை பூஜை செய்பவர் லட்சுமியின் அருளைப்...

யாழில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர்.

பிந்திய செய்திகள்

இந்தியா -தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் என சென்னை மண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அம்மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்ட...

லொஹான் ரத்வத்தயின் செயற்பாடு அரசாங்கத்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயின் செயற்பாடு, இலங்கை அரசாங்தக்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எதிர்வரும் காலங்கள் அவதானம் மிக்கவை : மத்திய அரசு அறிவுறுத்தல்!

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று வீழ்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், எதிர்வரும் காலங்களில் பண்டிகை காலம் ஆரம்பமாகும் என்பதால் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி!

இலங்கையில் 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர...

லொஹான் ரத்வத்தவின் விவகாரத்தில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் விவகாரம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனத் தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இதுதொடர்பான விசாரணைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மெய்வல்லுநர் : இரண்டாம் கட்டப் போட்டி பிற்போடப்பட்டது

99 ஆவது ‍தேசிய மெய்வல்லுநர் விளையாட்டு விழா அடுத்த மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம்  திகதிகளில் நடத்த இலங்கை மெய்வல்லுநர்...

துயர் பகிர்வு