Wednesday, October 27, 2021

இதையும் படிங்க

இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 100 சதவீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மூன்றாவது தடுப்பூசி செலுத்தலுக்கு அவசியமான தடுப்பூசியை, சம்பந்தப்பட்ட...

ஜெயலலிதா மரண விவகாரம் : அதிமுக அறிவித்தலுக்கு அமையவே சிசிடிவி கேமராக்களை நீக்கியதாக தெரிவிப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்கு வந்தபோது அவரின் தனிப்பட்ட விடயங்களை காப்பதற்காக அப்போதைய அரசு சிசிடிவி கேமராக்களை விலக்க கோரியதாகவும், இதன்காரணமாகவே சிசிடிவி கேமராக்கள் நீக்கப்பட்டதாவும் அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூர்ந்து பிரதமருக்கு பொப்பி மலர் அணிவிப்பு!

இலங்கை முன்னாள் பாதுகாப்பு பணியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு குறியீட்டு ரீதியாக பொப்பி மலரை அணிவித்தனர்.

கௌதம் அதானியின் இலங்கை விஜயம் உத்தியோகபூர்வ மற்றது!

இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியின் இலங்கை விஜயம் உத்தியோகபூர்வ விஜயம் அல்ல, அது ஒரு தனிப்பட்ட விஜயம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

அடுத்த ஆண்டு தை மாதம் முதல் 8 மாத காலத்திற்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தம் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 1,341,000+10/-5% பீப்பாய்கள்...

இந்தியாவிலிருந்து இந்த ஆண்டின் இறுதிக்குள் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும்!

கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பமாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

ஆசிரியர்

இலங்கையில் உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்க்க வெளிப்புறப் பொறிமுறை அவசியமில்லை!

நாட்டின் உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, வெளிப்புறப் பொறுமுறையொன்றின் தேவை ஒருபோதும் இல்லையென, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே தெரிவித்தார்.

அதே போன்று, அவ்வாறான பொறிமுறை ஒன்றைத் தயாரிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர், இலங்கையின் உள்ளக சட்டக் கட்டமைப்பின் கீழ், நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்படும் என்றார்.

ஜனாதிபதி ஊடக மையத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஊடகச் சந்திப்பு, இன்று (வியாழக்கிழமை) முற்பகல், வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்தப்பட்ட போது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“ஜெனீவா குற்றச்சாட்டுகள், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடர் மற்றும் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை” எனும் தலைப்புகளின் கீழ், இன்றைய ஊடகச் சந்திப்பு இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இம்முறை கூட்டத்தொடரின் போது, அதன் ஆணையாளர் நாயகம் மிச்செல் பெச்சலட் அவர்களினால் முன்வைக்கப்பட்ட வாய்மொழி அறிக்கையின் போது, காணாமல் போனோருக்கு நட்டஈடு வழங்கல், எல்.டி.டி.ஈ சிறைக் கைதிகளை விடுவித்தல், பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தைத் திருத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்திருந்தமை மகிழ்ச்சிக்குரியதென்று, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகளுக்குள் மறைந்திருந்து, இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையீடு செய்வதை, சீனா, ரஷ்யா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, பாகிஸ்தான், ஈராக், வெனிசியூலா உள்ளிட்ட 15 நாடுகள் எதிர்த்து, இலங்கையுடன் கைகோர்த்து நின்றன.

மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லிணக்கத்தைப் பின்பற்றல், பயங்கரவாதத்தை ஒழித்தல் போன்ற விடயங்களில் அரசாங்கம் கொண்டுள்ள பொறுப்புணர்வு, அவர்களின் விசேட பாராட்டுக்கு இலக்காகியுள்ளன என்றும், அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

வலயத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து, இலங்கையானது அமைதியான நாடாக விளங்குகிறது.

பயங்கரவாதத்தை ஒழித்தல், அடிப்படைவாதத்தைப் பரப்பும் தீவிரவாதத்தை ஒழித்தல் போன்றே, நாட்டு மக்களிடையே சமாதானம் மற்றும் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையானது, சீரமைக்கப்பட்ட கொள்கையாகும் என்று எடுத்துரைத்த வெளிநாட்டு அலுவல்கள் செயலாளர், அந்தக் கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டு, அதிகாரப் போட்டிகளில் சிக்கிக்கொள்ளாது முன்னோக்கி நகர்வதே இலங்கையின் நோக்கமென்றும் இதன்போது, இந்நாட்டின் அமைவிடம் தொடர்பில் அதிக அவதானத்துடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை எதிர்கொள்வதற்கான இலங்கையின் தயார்ப்படுத்தல்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த செயலாளர் ஜயநாத் கொழம்பகே, அரசாங்கத்தின் கொள்கை மிகத் தெளிவாக இருக்கின்றது என்றும் அது தொடர்பில், உலகின் பல நாடுகளுக்கு, கடந்த மாதங்களில் பல்வேறுபட்ட அறிக்கைகள் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றும், அவற்றின் பிரதிபலனாகவே, அந்நாடுகளின் ஒத்துழைப்பு இலங்கைக்கு தற்போது கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நீதி அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு போன்றன, இது விடயத்தின் பாரிய ஒருங்கிணைப்புடன் செயலாற்றியிருந்தன என்றும் அவர் எடுத்துரைத்தார்.

“கொவிட் சவாலை வெற்றிகொள்வது மற்றும் எதிர்காலத் திட்டங்கள்” என்ற உள்ளடக்கத்துடனேயே, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் இம்முறை பங்கேற்கவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து நாடுகளினதும் அரச தலைவர்களதும் உரைகள் அமையவுள்ளன என்று, இந்த ஊடகச் சந்திப்பில் விசேட உரையாற்றிய ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

தத்தமது நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திகள் தொடர்பான இணக்கப்பாடுகளுடன், கொரோனா சவாலை வெற்றிகொள்வதற்கு, இம்முறை கூட்டத்தொடர் பாரிய சந்தர்ப்பத்தை வழங்குமென்றும், அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியில் காணப்படும் பல்வேறு தவறான அபிப்பிராயங்களைச் சீர்செய்வதற்கும், இம்முறை ஐ.நா கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திக்கொள்வார் என்று தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் படிங்க

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை!

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையைப் பாதிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின்...

இலங்கையில் அரசாங்கத்தின் உயர் பதவி முன்னுரிமையில் கப்ராலுக்கு 5ஆவது இடம்!

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இலங்கை அரசாங்கத்தின்...

இலங்கையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை?

தடுப்பூசி செலுத்தியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எதிர்காலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. சுகாதார அமைச்சில்...

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைக்கப்படவில்லை!

இந்த விடயம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே...

இலங்கையின் கொரோனா முழு விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 556 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

இந்தியாவில் கொரோனா கண்டறியும் உபகரணங்கள் ஏற்றுமதி தடை நீக்கம்!

இந்தியாவில் கடந்த 216 நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களை கண்டறிவதில் பயன்படுத்தப்படும்,...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கையின் கொரோனா முழு விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 556 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

இந்தியாவில் கொரோனா கண்டறியும் உபகரணங்கள் ஏற்றுமதி தடை நீக்கம்!

இந்தியாவில் கடந்த 216 நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களை கண்டறிவதில் பயன்படுத்தப்படும்,...

ஓடிடி-க்கு செல்லும் கீர்த்தி சுரேஷின் ரூ.100 கோடி பட்ஜெட் படம்!

16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து...

மேலும் பதிவுகள்

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை? –எரிசக்தி அமைச்சர் விளக்கம்!

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்ட குழப்ப நிலை குறித்து விளக்கம் அளிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இந்த விடயம் குறித்து...

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் : நிதிசார் சட்டமூலங்களை தாக்கல் செய்ய திட்டம்?

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் முக்கியமான இரண்டு நிதிசார் சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் நவம்பர்...

உபி.யில் பிரதிக்யா யாத்திரையை தொடங்கி வைத்தார் பிரியங்கா!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தர பிரதேச அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்....

முன்னாள் அமைச்சர் ரஞ்சனின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல் பதிவு!

முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல்பதிவு விவகாரத்தில், மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி!

உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்ரேலிய அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்று அபுதாபியில் இடம்பெற்ற போட்டியில்...

இலங்கையில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கின்றது!

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே கொரோனா நிலைமையை இலகுவாக எடுத்துக் கொள்ளாமல் விழிப்புடன்...

பிந்திய செய்திகள்

செல்போன்களும் உடல் நல பாதிப்புகளும்…!

காலம் மாற மாற, புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் வித விதமாக தோன்றி உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல் நல கோளாறுகள் ஏற்கனவே உண்டு.

முட்டைகோஸ் பகோடா!

தேவையானவை:கடலை மாவு – முக்கால் கப்அரிசி மாவு – கால் கப்நறுக்கிய முட்டைகோஸ் – ஒரு கப்வெங்காயம் – 2 கப்சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்சீரகத்தூள் – அரை டீஸ்பூன்இஞ்சி...

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை!

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையைப் பாதிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின்...

இலங்கையில் அரசாங்கத்தின் உயர் பதவி முன்னுரிமையில் கப்ராலுக்கு 5ஆவது இடம்!

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இலங்கை அரசாங்கத்தின்...

இலங்கையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை?

தடுப்பூசி செலுத்தியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எதிர்காலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. சுகாதார அமைச்சில்...

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைக்கப்படவில்லை!

இந்த விடயம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே...

துயர் பகிர்வு