செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மன்னாரில் 14 வயது சிறுவன் தற்கொலை!

மன்னாரில் 14 வயது சிறுவன் தற்கொலை!

1 minutes read

மன்னாரில் 14 வயது சிறுவன் தற்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் 4 பேரை கைது செய்து, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்

இதன்போது, சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட நீதிபதி, குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், தற்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் தாயார் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையிலேயே, மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட இலுப்பைகடவை பொலிஸார், குறித்த மரணம் தொடர்பாக கள்ளியடி பகுதியை சேர்ந்த 16 வயது முதல் 22 வயதுடைய நான்கு பேரை கைது செய்து இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட குறித்த 4 பேரையும் மன்னார் நீதவானிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸார் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போதே மன்னார் நீதவான், குறித்த 4 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் திருட்டு பழி சுமத்திய 14 வயது சிறுவன் தற்கொலை- கொலை என தாயார் சந்தேகம்!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.