கல்முனையில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள கோழிக்குஞ்சு!

கல்முனைக்குடி பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் உள்ள கோழிக்குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வீட்டு உரிமையாளரால் நாட்டுக்கோழி வளர்ப்பதற்காக அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து வெளிவந்துள்ள, நான்கு கால்களை உடைய 2 நாட்களேயான இக்கோழிக் குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதனை காணும் சிறுவர்கள் சிறுவர் தினமான இன்று தங்களுக்கான சிறுவர் தின பரிசாக நினைத்து சந்தோசமடைந்துள்ளனர்.

ஆசிரியர்