Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் கொரோனா தொடர்பான முழு விபரம்!

இலங்கையில் கொரோனா தொடர்பான முழு விபரம்!

1 minutes read

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 746 பேர், நேற்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்டனர்.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 24 ஆயிரத்து 937 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 32 ஆயிரத்து 488 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல்வேறு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 421 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 79 ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More