March 26, 2023 10:55 am

சப்பாத்துக் காலுடன் சந்நிதி ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸ் அதிகாரி!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குள் சப்பாத்துடன் சென்ற பொலிஸ் அதிகாரி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கொட்டாச்சி என்பவரே இவ்வாறு மத நியதிகளை மீறி ஆலயங்களுக்குள் சப்பாத்துடன் சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று (புதன்கிழமை) நண்பகல் விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் ஆலய வெளி வீதியில் சப்பாத்துக்களை கழற்றிவிட்டு ஆலயங்களுக்குள் சென்று வழிபாடுகளை முன்னெடுத்த நிலையில் காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சப்பாத்துக்களை கழற்றாது ஆலயங்களுக்குள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்