Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் கொரோனா பாதிப்பு முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா பாதிப்பு முழுமையான விபரம்!

1 minutes read

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 680 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 28 ஆயிரத்து 415ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 4 இலட்சத்து 91 ஆயிரத்து 238 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 23 ஆயிரத்து 769 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் மேலும் 31 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 20 ஆண்களும், 11 பெண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More