Tuesday, December 7, 2021

இதையும் படிங்க

புதுச்சேரியில் முதலமைச்சர், தலைமை செயலாளர் இடையே மோதல்?

புதுச்சேரி: புதுச்சேரியில் முதலமைச்சர் ,தலைமை செயலாளர் இடையே மோதல் காரணமாக சட்டமன்றத்தில் அறிவித்த மக்கள்நல திட்டங்கள் மற்றும் மழை நிவாரணம் கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது....

நல்லூர் பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றம்!

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆளுகைக்குற்பட்ட நல்லூர்...

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில், ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம் என உச்ச...

ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகருக்கும் ஹாபிஸ் நசீருக்கும் இடையில் சந்திப்பு!

ஐக்கிய இராச்சியத்தின் இலங்கை தூதுவர் ஷாராஹ் ஹல்டன், இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாவட்டதிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட...

ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட தண்டனை கவலை அளிக்கிறது | இந்தியா

மியான்மர் தேசத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு, நாட்டை முன்னேற்றுவதற்கான அனைத்து தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினியை சந்தித்து பேசினார் சசிகலா

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளருமான சசிகலா, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். சென்னை போயஸ்...

ஆசிரியர்

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை ஆண்டு இறுதிக்குள் நிறைவுசெய்யுமாறு அறிவுறுத்தல்!

அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு அனுப்புவதற்கு பதிலாக ஆண்டு இறுதிக்குள் அபிவிருத்தி திட்டங்களை நிறைவுசெய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நகர அபிவிருத்தி, கழிவுப்பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் மூன்றாம் காலாண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

திறைசேரியில் மிகுதியாகும் நிதித்கேற்ப முதலீடுகளின் ஊடாக திட்டங்களை செயற்படுத்துவது குறித்து ஏற்கனவே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா இதன்போது சுட்டிக்காட்டினார்.

கடந்த ஜுலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட நூறு நகர அபிவிருத்தி திட்டங்கள் இதுவரை வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த சிறிநிமல் பெரேரா அவர்கள், இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் குறித்த அபிவிருத்தி திட்டங்களில் பெரும்பாலானவையை நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார அவர்கள் 2024ஆம் ஆண்டுக்குள் 60,000 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டம் காணப்படுவதாக தெரிவித்தார்.

அதற்கமைய குறைந்த வருமானம் ஈட்டுவோருக்காக 40,000 வீடுகளும், நடுத்தர வகுப்பினர் மற்றும் பிற மட்டத்தினருக்கு 20,000 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். நூறு நகர திட்டத்திற்கமைய அந்த ஒவ்வொரு நகரிலும் 100 வீடுகள் என்ற அடிப்படையில் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்;டு வருவதாகவும் உதய நாணயக்கார அவர்கள் தெரிவித்தார்.

‘கொழும்பில் மாத்திரமன்றி கிராமப் பகுதிகளிலும் இந்த வீடமைப்பு திட்டங்களை முன்னெடுங்கள்’ என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

நடுத்தர வகுப்பினருக்காக கொழும்பில் 3000 வீடுகளும், 2000 வீடுகள் கொழும்பின் புறநகரிலும் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டுவரும் நடை பாதை நிர்மாணத்திற்கமைய அப்பாதைகளை அண்மித்ததாக கிராமிய உற்பத்தி பொருள் விற்பனை நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் நணவீர அவர்கள் குறிப்பிட்டார்.

கொழும்பு பெருநகர நகர்ப்புற திட்டம் மற்றும் மூலோபாய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் நிறைவில் அமைச்சின் ஒவ்வொரு நிறுவனங்களிலும் செயற்படுத்தப்பட வேண்டிய நிதித் திட்டமிடல் மற்றும் மனிதவள முகாமைத்துவ மாதிரி கௌரவ பிரதமரினால் நிறுவன தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் நகர அபிவிருத்தி, கழிவுப்பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா, நாடாளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலகத்தின் பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர உள்ளிட்ட அமைச்சக நிறுவன பிரதானிகள் கலந்து கொண்டிருந்தனர்

இதையும் படிங்க

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு!

மீனம்பாக்கம்: நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்போதுமே மதிப்பவன் நான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதை...

மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபடுவோரை பாகிஸ்தான் விட்டுவைக்காது – இம்ரான் கான் சபதம்

இஸ்லாம் அல்லது நபி (ஸல்) அவர்களின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் விட்டுவைக்காது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செவ்வாயன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஈழக்காண்பி ‘Eelamplay’ | ஈழத் திரைப்படங்களை வெளியிட அறிமுகமாகும் ஓடிடி தளம்

ஈழக்காண்பி (Eelamplay) என்பது ஓர் உறுப்புக்கட்டணத் திரையோடைத் தளமாகவும் (streaming platform) ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது.Eelamplay is a subscription-based...

கிளிநொச்சியிலுள்ள வீடொன்றிலிருந்து எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி- உமையாள்புரம் சோலை நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன. கடந்த...

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இதற்கமைய நாட்டில் மேலும் 21 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (திங்கட்கிழமை) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையை பொதுவான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்!

இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், 2014 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் பாராட்டத்தக்க நிலையில் இருந்ததாக குறிப்பிட்டார். போருக்குப் பின்னர், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில், ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம் என உச்ச...

ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகருக்கும் ஹாபிஸ் நசீருக்கும் இடையில் சந்திப்பு!

ஐக்கிய இராச்சியத்தின் இலங்கை தூதுவர் ஷாராஹ் ஹல்டன், இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாவட்டதிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட...

ஐசியூவில் படுத்தபடி கதை எழுதிய வசந்தபாலன்!

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜெயில். இப்படத்தின் விழாவில் பேசிய வசந்தபாலன், தனது கொரொனா பாதித்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறார்.

மேலும் பதிவுகள்

இந்தியா -தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக எச்சரிக்கை!

கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் உள்ள ஒருசில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இரண்டிற்கும் அதிகமான மாவட்டங்களில் கொரோனா அதிகரிக்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் உள்ளதாக மத்திய...

பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நலனுக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது!

சியல்கோட்டில் உயிரிழந்த இலங்கையரின் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு தேவையான நடவடிக்கையை எடுத்துவருவதாக அரசாங்கம் கூறியுள்ளது. அதன்படி பிரியந்த குமாரவின் பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலத்திற்காக பாகிஸ்தான்...

நான் பார்த்த முதல் முகம் நீ..! – வெளியானது வலிமை படத்தின் 2-வது பாடல்..!

சென்னை,நடிகர் அஜித் குமார் நடிப்பில் டைரக்டர் வினோத் இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகின்றன. வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல்...

இந்தியாவில் ஒமிக்ரோன் குறித்து எவரும் அச்சப்பட வேண்டாம்!

கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் குறித்து எவரும் அச்சப்பட வேண்டாம். ஆனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வெஜிடபிள் ஊத்தாப்பம்!

வெஜிடபிள் ஊத்தாப்பத்தில் பலவகையான காய்கறிகள் சேர்ப்பதால், அதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகம் நிறைந்திருக்கும். இதை காலை வேளையில் சாப்பிடும் போது, அந்நாளுக்குத் தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைக்கும்.

இந்தியா–ரஷ்யா இடையே 5,200 கோடி ரூபாய் ஒப்பந்தம் கையெழுத்தானது!

பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கும் இரு நாடுகள் இடையேயான 21 ஆவது உச்சிமாநாடு இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் நடைபெறுகிறது. இதனை...

பிந்திய செய்திகள்

பூண்டு தரும் ஆச்சரியமான அழகு ரகசியங்கள்

பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.

குழந்தைகள் பிஸ்கெட் சாப்பிடுவதால் வரும் பிரச்சனைகள்

குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்துவிட்டால், தாய்பால் போதவில்லை என பல தாய்மார்கள் இணை உணவாக பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள். தெரிந்தே தங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சை...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு!

மீனம்பாக்கம்: நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்போதுமே மதிப்பவன் நான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதை...

தம்புள்ளையை 8 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று பிற்பகல் நடைபெற்ற தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபடுவோரை பாகிஸ்தான் விட்டுவைக்காது – இம்ரான் கான் சபதம்

இஸ்லாம் அல்லது நபி (ஸல்) அவர்களின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் விட்டுவைக்காது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செவ்வாயன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஈழக்காண்பி ‘Eelamplay’ | ஈழத் திரைப்படங்களை வெளியிட அறிமுகமாகும் ஓடிடி தளம்

ஈழக்காண்பி (Eelamplay) என்பது ஓர் உறுப்புக்கட்டணத் திரையோடைத் தளமாகவும் (streaming platform) ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது.Eelamplay is a subscription-based...

துயர் பகிர்வு