செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியாவை நெருங்குவது சாதாரண விடயமல்ல | பேராசிரியர் ரோஹன

தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியாவை நெருங்குவது சாதாரண விடயமல்ல | பேராசிரியர் ரோஹன

1 minutes read

13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் மற்றும் 1987 ஆம் ஆண்டு வாக்குறுதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழ் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளமை வழமை போன்ற செயற்பாடாக இருந்தாலும் இப்போது இதனை சாதாரணமாக கருத முடியாது. 

ஆகவே தமிழர் தரப்பின் பிரச்சினைகளை செவிமடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் மற்றும் அரசியல் முரண்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையில் தமிழர் தரப்பு இந்தியாவுடன் தனிப்பட்ட தொடர்புகளை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படுகின்றது. 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் மற்றும் 1987 ஆம் ஆண்டு வாக்குறுதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தியுள்ளமை வழமை போன்ற செயற்பாடாக இருந்தாலும் இப்போது இதனை சாதாரணமாக கருத முடியாது. 

இன்று சீனா ஜப்பான் ஒருபக்கம் பலமடைந்து வருகின்ற நிலையில் அமெரிக்க தலைமையில் இந்தியா அவுத்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் கூட்டணி உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்த போட்டியில் இலங்கை சிக்கிக்கொண்டுள்ளது, இதில் தமிழர் தரப்பின் நகர்வுகள் அவதானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். 

வெவ்வேறு நாடுகளுடன் நாம் பகுதி பகுதியாக இணைய நினைப்பது ஆரோக்கியமான விடயம் அல்ல. நாடாக ஒரே கொள்கையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக முதலில் தேசிய மட்டத்தில் சகல தரப்பையும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். 

தமிழர் தரப்பின் பிரச்சினைகளை செவிமடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். இனியும் தவறான கொள்கையில் அரசாங்கம் பயணித்தால் ஒட்டுமொத்த நாடுமே பாதாளத்தில் விழும் எனவும் அவர் கூறினார். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.