செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மின் வெட்டு குறித்து இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு!

மின் வெட்டு குறித்து இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு!

0 minutes read

நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று (புதன்கிழமை) மின் வெட்டு அமுல்படுத்தப்படாதென எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார சபைக்கு போதுமான எண்ணெய்யைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

இதன்படி, பெரும்பாலும் இன்றைய தினத்திற்கு அவசியமான எண்ணெய் மின்சார சபைக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

எனவே, போதியளவு உலை எண்ணெய்யும் டீசலும் கிடைக்கப்பெறுமாயின், நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மின் வெட்டு அமுல்படுத்தப்படாதென அவர் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.