செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் பொது போக்குவரத்துகளில் இனி தடுப்பூசி அட்டை அவசியம்!

இலங்கையில் பொது போக்குவரத்துகளில் இனி தடுப்பூசி அட்டை அவசியம்!

1 minutes read

பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். சுகாதாரத் துறையினால் சுற்றறிக்கை அல்லது விழிப்புணர்வு வெளியிடப்பட்டால், மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மட்டுமே பொதுப் போக்குவரத்தில் பயணிக்க வேண்டும் என்ற உண்மையை நாம் கடைபிடிக்க வேண்டும்.

ஏனெனில் இது ஒரு தொற்றுநோயாகும். இந்த நிலைமை தொடர்பான முடிவுகளை சுகாதார அமைச்சு எடுக்க வேண்டும். அதற்கமைய 3 தடுப்பூசி பெற்றவர்கள் மாத்திரமே பொதுப் போக்குவரத்தில் பயணிக்க வேண்டும் என நடைமுறையை பொது மக்கள் பின்பற்ற வேண்டும்.

இது தொடர்பில் எங்களுக்கு கடிதம் மூலம் எதுவும் தெளிவுபடுத்தப்படவில்லை. எனினும் வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய சுற்றரிக்கை வெளியிட்டு எங்களுக்கு எழுத்து மூலம் அறிவிப்பார்கள்.

அவ்வாறு தகவல் கிடைத்தவுடன் பொதுப் போக்குவரத்தில் தடுப்பூசி அட்டையை சேகரிக்க ஆலோசனை வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.