செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வட்டுக்கோட்டையில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வட்டுக்கோட்டையில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

1 minutes read

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, அராலி செட்டியார்மடம் சந்தியில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த மற்றைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்தில் உடையார் கட்டு – விசுவமடு பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டு, வட்டு மேற்கு – வட்டுக்கோட்டை பகுதியில் வசித்துவந்த கந்தசாமி நிரோஜன் (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கட்டுப்படுத்த முடியாத அதிவேகம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த விபத்து நிகழ்ந்த இடத்தில் ஆபத்தான வளைவு ஒன்று உள்ளதுடன், வீதி அபிவிருத்தி நிறைவடைந்த நிலையில், வீதியின் ஓரத்தில் போடப்படவேண்டிய எல்லைக்கோடு இன்னமும் போடப்படவில்லை. என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் குறித்த இடத்தில் வேகக் கட்டுப்பாட்டு தடை போடப்படவேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.