செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோதுமையின் விலை குறைகிறது!

கோதுமையின் விலை குறைகிறது!

1 minutes read


அடுத்த வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. 

சந்தையில் கோதுமை மாவின் விலை  கடுமையான உயர்வினை எட்டியுள்ளதாலும், கோதுமை மா பற்றாக்குறையினாலும் பொதுமக்கள் மற்றும் பேக்கரி தொழிற்துறையுடன் ஈடுபடுவோர் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.

குறைவடையும் விலை

கோதுமையின் விலை குறைகிறது! புதிய விலை தொடர்பான அறிவிப்பு | Sri Lanka Food Crisis Price Of Wheat Flour

இந்த நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட கோதுமை மா துறைமுகத்திற்கு வந்துள்ளதன் காரணமாக அடுத்த வாரம் முதல் கோதுமையின் விலை குறைவடையும்  என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட கோதுமை மா கடந்த வாரம் நாட்டிற்கு வந்துள்ளது.

300 ரூபாவிற்கு குறையும்

மேலும் கடந்த மாதங்களில் கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் முன்பதிவு செய்யாமையினால், நாட்டில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 – 400 ரூபா வரை அதிகரித்தது.

கோதுமையின் விலை குறைகிறது! புதிய விலை தொடர்பான அறிவிப்பு | Sri Lanka Food Crisis Price Of Wheat Flour

எவ்வாறாயினும், கொழும்பு 4ஆம் குறுக்குத் தெரு இறக்குமதியாளர்கள் கோதுமை மாவை முன்பதிவு செய்து கையிருப்பு பெறுவதால் கிலோ ஒன்றின் விலை 300 ரூபாவிற்கும் குறைவடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.  

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.