March 31, 2023 7:18 am

மது போதையில் இளைஞர் படுகொலை! – நால்வர் கைது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

முல்லைத்தீவு, உடையார்கட்டுப் பகுதியில் 21 வயது இளைஞர் துரவிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 4 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சம்பவம் தொடர்பில் மாறுபட்ட தகவல்களை விசாரணையில் தெரிவித்துள்ளனர் என்று அறியமுடிகின்றது.

உயிரிழந்த இளைஞர் உட்பட 5 பேர் மது அருந்தியுள்ளனர். இதன்போதே இளைஞரை இழுத்துச் சென்று துரவில் தள்ளி விழுத்தியுள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

5 பேர் ஒன்றாக மது அருந்தினர் எனவும், திடீரென இளைஞர் ஒருவன் தன்னை விடுமாறு கூக்குரலிடும் சத்தம் கேட்டது எனவும் அயலவர்கள் விசாரணையின்போது குறிப்பிட்டுள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்