March 31, 2023 7:34 am

“வரம்பை மீறும் வேட்பாளர்கள் மீது சட்டம் பாயும்”

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கான நிர்ணயிக்கப்பட்ட செலவின வரம்பை மீறும் வேட்பாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

எவ்வளவு தொகை செலவிட வேண்டும் என்பது குறித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேலதிகமாக அனைத்து அரசியல் கட்சிகளின் சுயேச்சைக் குழுக்களுக்கும் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் செலவினம் ஒழுங்குபடுத்தல் தொடர்பான சட்டவரைவு ஜனவரி 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்