March 31, 2023 8:12 am

நாளைய சபை அமர்வைப் புறக்கணிக்கின்றது சஜித்தின் கட்சி!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடரை நாளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைக்கின்றார். அதேவேளை, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையும் இடம்பெறும்.

இந்தநிலையில், ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய நாடாளுமன்ற அமர்வைப் புறக்கணிப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இந்தத் தகவலை வெளியிட்டார்.

அத்துடன், டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையும் குறித்த அமர்வை புறக்கணிக்கவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்தாலும் அதன் பங்காளிக் கட்சிகளான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன பங்கேற்கவுள்ளன.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்