May 28, 2023 4:46 pm

நெடுமாறன் வதந்தி பரப்புகிறார்! – மஹிந்த தெரிவிப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“இந்தியாவில் உள்ளவர்கள் தங்கள் சுயலாப அரசியலுக்காகப் பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்தி வதந்தி பரப்புகின்றனர். இது தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.”

– இவ்வாறு இறுதிப் போரின் போது பாதுகாப்பு அமைச்சராகவும் ஜனாதிபதியாகவும் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“வன்னியில் இராணுவத்தினருடனான மோதலில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட நாளன்று இறுதிப்போரும் நிறைவுக்கு வந்தது. போர் வெற்றியும் அன்று எம்மால் அறிவிக்கப்பட்டது.

உயிரிழந்த பிரபாகரனின் சடலத்தை எமது இராணுவத்தினர் கைப்பற்றி நல்லடக்கம் செய்தனர். இது யாவரும் அறிந்த உண்மை” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்