செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நான்கு பொலிஸாருக்குத் தூக்குத் தண்டனை!

நான்கு பொலிஸாருக்குத் தூக்குத் தண்டனை!

0 minutes read

திஸ்ஸமஹாராமவில் சூதாட்ட நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் ஒருவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர் என்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் 2005 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் திகதி இடம்பெற்றது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களில், இருவர் தற்போது பொலிஸ் கடமையில் உள்ளனர்.

அவர்களில் ஒருவர் ஹங்கம பொலிஸ் குற்றப் பிரிவிலும், மற்றையவர் அரச புலனாய்வு சேவையிலும் இணைக்கப்பட்டுள்ளனர்.

மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது பொலிஸ் கடமையில் இல்லை எனவும், இன்னுமொருவர் ஓய்வுபெற்றுள்ளார் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.