செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரபாகரனின் புதிய படம் போலி எனத் தெரிவிப்பு!

பிரபாகரனின் புதிய படம் போலி எனத் தெரிவிப்பு!

0 minutes read

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது தற்போதைய படம் என அண்மையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் படம் உண்மையானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையைச் சரி பார்க்கும் பெக்ட் செக் இணையத்தளம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த படம் தொடர்பான ஆய்வை மேற்கொண்டு, அதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, அவரின் முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று, மாற்றியமைக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான பழ. நெடுமாறன் அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

எனினும், அவர் எங்கு உள்ளார் என்பது குறித்த விபரங்களை நெடுமாறன் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.