September 22, 2023 2:44 am

மாத்திரைகளை அதிகளவில் விழுங்கிய பேராதனைப் பல்கலை மாணவி சாவு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு குறித்த மாணவி சுகயீனமுற்றிருந்த நிலையில் காணப்பட்டார். பேராதனை பல்கலைக்கழகத்தின் மலலசேகர விடுதியில் குறித்த மாணவி இருந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் இன்று காலை உயிரிழந்தார்.

குருநாகல் பகுதியைச் சேர்ந்த வினோதி டி சில்வா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தார்.

அவர் சில காலமாக மன அழுத்தத்தால் சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்