September 22, 2023 2:45 am

பாண் விலையைக் குறைக்க முடிவு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“பாண் உள்ளிட்ட பேக்கரிப் பொருள்களின் விலை குறைக்கப்படும். குறைந்தபட்சம் ஒரு இறாத்தல் பாண் 100 ரூபாவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.”

– இவ்வாறு அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்தார்.

பாண், பணிஸ் உள்ளிட்ட பேக்கரி பொருள்களின் விலையைக் குறைத்தால் மட்டுமே தற்போது முடங்கியுள்ள பேக்கரித் தொழிலை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

தற்போது ஒரு இறாத்தல் பாண் 150, 160, 170 எனவும், சில பகுதிகளில் 180 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது எனவும் தெரிவித்த ஜயவர்த்தன, அந்த விலைகளை நுகர்வோரால் தாங்க முடியாது எனவும், அதனால் பாண், பணிஸ் என்பவற்றின் விற்பனை 20 முதல் 25 வீதம் வரை குறைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மின் கட்டண உயர்வால், பேக்கரித் தொழிலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, பேக்கரித் தொழில் நலிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும், பேக்கரித் தொழிலைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளால் பல ஆயிரம் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் கூறினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்