September 22, 2023 3:00 am

தபால் மூல வாக்களிப்பை மார்ச் 28 – 31 வரை நடத்தத் திட்டம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளூடாக வௌியிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்