Saturday, May 4, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாவலப்பிட்டி மோதலில் 3 தமிழ் மாணவர்கள் உட்பட எழுவர் காயம்!

நாவலப்பிட்டி மோதலில் 3 தமிழ் மாணவர்கள் உட்பட எழுவர் காயம்!

1 minutes read

கண்டி, நாவலப்பிட்டி நகரிலுள்ள பிரபல தமிழ் மொழி மூல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் மீது குழு ஒன்று மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதலில் மூன்று மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட பாடசாலையில் பயிலும் மாணவிகளுக்கு இளைஞர் குழு ஒன்று தொலைபேசி இலங்கங்களை வலுக்கட்டாயமாகக் கொடுத்து தினமும் சேட்டைகளில் ஈடுபட்டு வந்தது எனவும், இதனால் மாணவிகள் மன உளைச்சளுக்கு உள்ளாகி வருவதை அவதானித்த சக வகுப்பு மாணவர்கள் சேட்டைகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு எடுத்துக்கூறி கண்டித்தமையே மாணவர்கள் மீதான தாக்குதலுக்குக் காரணம் எனவும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

மேற்படி பிரச்சினை நீண்ட நாட்களாக நிலவி வந்தது எனக் கூறப்படும் நிலையில் கடந்த 6 ஆம் திகதி, காயமுற்ற மாணவர்களில் ஒருவனின் வீட்டுக்கு ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் குறித்த மாணவனைத் தாக்க முற்பட்டனர். இதன்போது நடந்த கைகலப்பில் குறித்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளைக் கைவிட்டுச் சென்றனர்.

பின்னர் 7 ஆம் திகதியும் இரு மாணவர்களை மேற்குறிப்பிட்ட குழுவினர் தாக்கினர். எனினும், அந்தத் தாக்குதல் சமசரம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், நேற்றுமுன்தினமும் (08) பாடசாலை முடிந்து பிற்பகல் 1.30.மணியளவில் வீடு நோக்கிச் சென்ற மேற்படி மூன்று மாணவர்களையும் ஐந்து பேரடங்கிய குழு கடை ஒன்றுக்குள் இழுத்துச் சென்று தாக்கியது.

இதன்போது தடுக்கச் சென்ற மாணவன் ஒருவனின் சகோதரர் உட்பட தாக்குதல் மேற்கொண்ட மூவர் அடங்கலாக ஏழு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்

மேற்படி சம்பவம் குறித்து இரு தரப்பிலும் இருந்து கிடைக்கப்பெற்ற முறைபாடுகள் தொடர்பான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More