March 31, 2023 6:32 am

முக்கொலை சந்தேகநபர் சிக்கினார்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மூன்று பெண்கள் கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் உடைமைகள் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய யகிரல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் எல்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி இத்தேபனையில் பெண்ணொருவர் கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்டு உடமைகள் கொள்ளையிடப்பட்டதுடன், கடந்த மாதம் எல்பிட்டியவில் இரண்டு பெண்களைக் கழுத்து நெரித்துக் கொலை செய்து அவர்களது உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இந்தச் சம்பவம் தொடர்பாக எல்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து தங்க நெக்லஸ், 3 ஜோடி காதணிகள் மற்றும் தொலைபேசி என்பனவற்றைக் கைப்பற்றியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்