March 31, 2023 6:36 am

“இலங்கைக்கு முழு ஆதரவு தாருங்கள்”

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இந்தியாவின் இராஜதந்திரி ஸ்ரீ.கோபாலசாமி பார்த்தசாரதி, ஜோர்தானுக்கான இந்தியாவின் முன்னாள் தூதுவர் மாரிமுத்து மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.

கோபாலசாமி பார்த்தசாரதியின் அழைப்பின் பேரில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன் எதிர்காலத்தில் இலங்கைக்கு இந்தியா முழு ஆதரவை வழங்க வேண்டும் எனவும் இதன்போது இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் வலியுறுத்தினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்