October 4, 2023 4:41 pm

மீண்டும் கடன் வாங்க இந்தியாவுடன் இலங்கை பேச்சு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இந்தியாவிடமிருந்து சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களை இலங்கை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் மூத்த பொருளாதார நிபுணருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடன் தொகையானது இந்திய ரூபாவில் பெறப்படும் என்றும், கடன் தொகையின் பெறுமதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கடன் பெறுமதி ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்திருக்கும் என்றும், இந்தப் பணம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்துக்குப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்