October 4, 2023 2:43 pm

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: திருத்த யோசனை பெறும் காலம் நீடிப்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கான காலம் மே 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ச தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தம் தொடர்பான யோசனைகளை அனுப்புமாறு பொதுமக்களையும் சிவில் அமைப்புக்களையும் கோருவதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த யோசனைகள் மற்றும் கருத்துக்களைக் கவனத்தில்கொண்டு புதிய சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புடன் பேச்சு நடத்தத் தீர்மானிக்கப்படும் என்றும் நீதி அமைச்சர் மேலும் கூறினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்