இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகியவற்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 11, 12, 13ஆம் திகதிகளில் பேச்சு நடத்தவுள்ளார். அதற்கு முன்னோடியாக இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
“கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து அழைப்பு வந்தது. அவர்தான் எம்மை இந்தப் பேச்சுக்கு அழைத்துள்ளார். தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு வந்ததும் சந்திப்பதாகக் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்தச் சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.