Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். பல்கலையில் கஜன், சுலக்சனின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்!

யாழ். பல்கலையில் கஜன், சுலக்சனின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0 minutes read

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களான கஜன், சுலக்சன் ஆகியோரின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் இன்று (20) நடைபெற்றது.

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் கஜன், சுலக்சனின் நினைவுப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ச்சியாகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் நெவில்குமாரினால் நினைவுப் பேருரையும் ஆற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அழகராசா விஜயகுமார், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More