செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? – உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்கிறார் மஹிந்த

மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? – உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்கிறார் மஹிந்த

0 minutes read

உரிய நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவிக்கும் என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தனது 78 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கம்பஹா மாவட்டத்திலுள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மதிய உணவு மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பொதிகளை மஹிந்த ராஜபக்ஷ நேற்று வழங்கிவைத்தார்.

கம்பஹா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் நடைபெற்றாலும் எமது கட்சியே வெற்றி பெறும். தேர்தல்களை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் நிலையிலேயே உள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் எப்போது நடைபெறும் என்று எமக்குத் தெரியாது. எனினும், உரிய நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.