ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் நிச்சயம் நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று, 2024 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வரவு – செலவுத் திட்டத்துக்கு (இராண்டாம் வாசிப்பு) ஆதரவாக வாக்களித்த 122 எம்.பிக்களுக்கும் நன்றிகள். அவர்களின் ஒத்துழைப்பு தேவை. அத்துடன், எதிராக வாக்களித்த உறுப்பினர்களுக்கும் நன்றி கூற வேண்டும். ஏனெனில் எதிரணிக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்படும். அதன்பின்னர் ஏனைய தேர்தல்கள் நடத்தப்படும். தேர்தல்களை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை.” – என்றார்.