Thursday, February 22, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். வந்த நடிகை ரம்பா மானிப்பாயில் வழிபாடு!

யாழ். வந்த நடிகை ரம்பா மானிப்பாயில் வழிபாடு!

0 minutes read

தென்னிந்திய தமிழ் நடிகை ரம்பா யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.

நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைப் பூர்வீகமாகக் கொண்ட கனடா முதலீட்டாளராவார்.

இவரின் முயற்சியாக யாழ்ப்பாணத்தில் நொதேர்ன் யுனி தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நொதேர்ன் யுனியின் அனுசரணையில் டிசம்பர் 21ஆம் திகதி யாழ்ப்பாணம், முற்றவெளியில் தென்னிந்தியப் பாடகர் ஹரிஹரன் பங்கேற்கவுள்ள பிரம்மாண்டமான இலவச இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதேவேளை, புதிதாக உருவாக்கப்பட்ட நொதேர்ன் யுனியில் சமய சம்பிரதாயபூர்வமாக பால் காய்ச்சி இன்றைய தினம் சாமி படம் வைக்கப்படுகின்றது.

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More