செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 24 மணிநேரத்தில் 733 பேர் கைது!

24 மணிநேரத்தில் 733 பேர் கைது!

0 minutes read

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 733 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 589 பேரும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 144 பேரும் அடங்குகின்றனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கைதானவர்களில் 4 பேர் புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகத்தால் தேடப்படும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 8 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சுற்றிவளைப்புகளின் போது 130 கிராம் ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.