Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்ப்பாணத்தை வந்தடைந்த தென்னிந்தியப் பிரபலங்கள்!

யாழ்ப்பாணத்தை வந்தடைந்த தென்னிந்தியப் பிரபலங்கள்!

2 minutes read

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வை முன்னிட்டு தென்னிந்தியப் பிரபலங்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

இந்தக் குழுவினர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தபோது கலை, கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை (09) வெள்ளிக்கிழமை ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் பிரபல தென்னிந்திய நடன இயக்குநர் கலா மாஸ்டர் உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினர் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

இதையடுத்து பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட இசைக் குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ், ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா, நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பலர் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More